மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நிவின்பாலி. இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய நிவின் பாலி அடுத்தடுத்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்த முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகைகள் மற்றும் பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக புகார் தெரிவிக்க ஆரம்பித்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் சிக்கினர். அந்த வகையில் நடிகர் நிவின் பாலி மீதும் இளம்பெண் ஒருவர் துபாயில் வைத்து தன்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார்.

ஆனால் அந்தப் பெண் கூறிய அதே நேரத்தில் நிவின் பாலி கொச்சியில் ஒரு பட சூட்டிங்கில் இருந்ததற்கான ஆதாரமும் அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி இருந்ததற்கான ஆதாரமும் வெளியானது. இது குறித்து அந்த பெண்ணிடம் கேட்டபோது தூக்க கலக்கத்தில் தேதியை மாற்றி கூறிவிட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தப்பட நிலையில் தற்போது இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதாவது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் நடிகர் நிவின் பாலி  மீதான புகார்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நடிகர் நிவின் பாலி நன்றி கூறியுள்ள நிலையில் விரைவில் வழக்கில் இருந்து விடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.