தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டெல்லி கணேஷ். இவர் முதல் முறையாக டெல்லி நாடக குழுவில் இணைந்து தன் திரைப்பயணத்தை தொடங்கியதால் இயக்குனர் கே பாலச்சந்தர் அவருக்கு டெல்லி கணேஷ் என்ற பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் 400க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

அவர் நேற்று இரவு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவருடைய உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில்  பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தற்போது டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.