மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் பேருந்து நடத்துனர் ஒருவர் பள்ளி மாணவி ஒருவரை கேலி செய்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு அந்த மாணவி கொடுத்த தண்டனை காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தவறாக நடத்திய நடத்துனரை அந்த பள்ளி மாணவி செருப்பால் அடித்து தண்டனை கொடுத்துள்ளார்.

அவருடன் இருந்த சகத் தோழியும் நடத்துனரை தாக்கியுள்ளார். சுற்றி நின்ற பலர் முன்னிலையில் நடத்துனரை நிற்க வைத்து பள்ளி மாணவி கேள்வி கேட்டு தாக்கும் இந்த காணொளி அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமானோர் மாணவிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.