திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்தில் நடத்துநர் புகைப்பிடித்த விவகாரம் வைரலான நிலையில், அதனை வீடியோவாகப் பதிவு செய்து சிக்கலில் மாட்டிவிட்ட ஓட்டுநரின் பின்னணி தற்போது பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அரசுப் பேருந்தில் பயணிகள் அமரும் இருக்கை வழியில் அமர்ந்துகொண்டு நடத்துநர் ஒருவர் சிகரெட் பிடிக்கும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் அந்த நடத்துநர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த வைரல் வீடியோவை உற்று நோக்கினால், பேருந்தை இயக்கியபடி ஓட்டுநரே தனது செல்போனில் அதனைப் பதிவு செய்தது தெளிவாகத் தெரிகிறது.

பேருந்தை ஓட்டிக்கொண்டே கவனச்சிதறலுடன் செல்போனில் வீடியோ எடுத்த ஓட்டுநரின் செயல் பயணிகளின் பாதுகாப்பைத் கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

“>

சிகரெட் பிடித்த நடத்துநரின் தவறு ஒருபுறம் இருக்க, விபரிதமான முறையில் வீடியோ எடுத்துத் தில்லாலங்கடி வேலை பார்த்த ஓட்டுநர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.