தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். முன்னதாக பக்தர்கள் கடலில் குளித்து செல்வார்கள். ஆனால் சமீப காலமாக திருச்செந்தூரில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி, அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். கோவில் முன்பு இருக்கும் கடலின் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.