தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தென் தமிழக பகுதிகளில் பரவ உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

சில இடங்களில் இயல்பில் இருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும். சென்னை மற்றும் புறநகர் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். கேரள பகுதியில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்திலும் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் வெப்பம் தணிந்து இனி குளிர்ச்சியான சூழல் நிலவ கூறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.