தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படும் உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணி மற்றும் நீதிபதி வி. சிவஞானம் ஆகியோர் முன்னணியில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பல பேர் கைது செய்ய படுகின்றனர். இவர்களுக்கு  இடைக்கால ஜாமின் வழங்கலாமா என்ற கேள்வியை நீதிபதி கேட்டார். அதோடு இந்த கேள்விக்கு பதில் அளிக்குமாறு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை அறிவுறுத்தினார். அதன்படி இன்று விளக்கம் அளித்த அவர், இடைக்கால ஜாமின் வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு வழக்கிற்கும் இது வேறுபடும் என்று கூறினார்.

அப்போது நீதிபதி, தேவையின்றி தடுப்பு காவல் சட்டம் பயன்படுத்துவதும் ,தேவையின்றி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், எதுவும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. மேலும் தேவையின்றி தடுப்பு காவல் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று டி.ஜி.பிக்கு முன்னதாக கடிதம் அனுப்பியுள்ளோம். அதனால் தற்போது தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அவர் கூறினார். இதையடுத்து தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவதை தவிர்த்து அதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறித்தினார்.  மேலும் பொதுமக்கள் பயமின்றி காவல் நிலையத்திற்கு வரும்  சூழலை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.