மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது தந்தையுடன் ராஞ்சியில் உள்ள RKDF பல்கலைக்கழகத்திற்கு தேர்வு ஒன்று எழுதுவதற்காக வந்துள்ளார். இதற்காக பல்கலைக்கழகத்தின் அருகே அமைந்துள்ள காவியன் ரெசிடென்சியில் அரை எடுத்து தங்கி உள்ளனர். ஆனால் அந்த இளம் பெண்ணிற்கு அங்கு தான் பெரும் துயரம் நடந்துள்ளது.

அவரது தந்தை இரவு உணவுக்கு வெளியில் சென்ற சமயம் ஐந்து பேர் வலுக்கட்டாயமாக அறையினுள் நுழைந்து அவரது ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்து தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். அந்த சமயத்தில் இளம் பெண்ணின் தந்தை அறைக்கு வந்துவிட ஐவரும் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றனர்.

பின்னர் தந்தையிடம் இளம் பெண் நடந்துவற்றை எடுத்துக் கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் இருவரும் மேற்கு வங்காளத்திற்கு புறப்பட்டு சென்றனர். வெளியில் எதையும் சொல்ல வேண்டாம் என்று புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். ஆனால் இளம்பெண்ணின் மனநிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. இதனால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைத்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.