ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். அதன் பிறகு நடிகர் பவன் கல்யாண் ஜனாசேனா கட்சியும் அதிக இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துள்ளது. இந்த தேர்தல் முடிவடைந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகியான கிரிநாத் சவுத்ரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையில் நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது.

அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளான ராமகிருஷ்ணா, பாமையா உட்பட சிலர் கிரிநாத் சவுத்ரியை கொல்ல முடிவு செய்தனர். அவரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தடுக்க கிரிநாத்தின் சகோதரர் கல்யான் வந்தபோது அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த விவகாரம் தெரிய வரவே தெலுங்கு தேசம் கட்சியினர் அந்தக் கட்சியினரின் மோட்டார் சைக்கிளில் தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.