கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதால் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது திடீரென உள்ளே நுழைந்து நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. மேலும் சீமானுக்கு எதிராக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினால் தேடி சென்று அடிப்போம் எனவும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.