நடிகை கஸ்தூரி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய பின்னர் அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த பிறகு மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் எழும்பூர் காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.