தமிழகத்தில் பெஞ்சல் புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த நிலையிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து தண்ணீர் தேங்கி நிலையிலும் அது சீக்கிரம் வடிந்தது. அதன் பிறகு தற்போது விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், தூங்கி வழிந்த நிர்வாகத்தால் மனித தவறுகளால் சென்னை மக்கள் இரவில் தூக்கம் தொலைத்தது அதிமுக ஆட்சிக்காலத்தில். இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிடும் காலம் நமது திராவிட மாடல் ஆட்சி காலம். இயல்பு நிலைக்கு திரும்பிய பணிகளை பார்வையிட்ட போது மக்களின் அன்பையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு விழுப்புரம் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய களத்தில் பணியாற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.