வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துரை தயாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரை சந்தித்து நலம் விசாரித்தார். அழகிரியின் மகன் கடந்த 14ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஏ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த ஏ வார்டில் துரை தயாநிதிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துரை தயாநிதிக்கு என்று தனியாக மருத்துவ குழு சிஎம்சி மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் ஒரு மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக  முதலமைச்சர் முக ஸ்டாலின்  காரில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வந்து துரை தயாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு, பின்பு அந்த மருத்துவ குழுவினரிடம் துரை தயாநிதிக்கு எவ்வாறு உடல்நிலை இருக்கிறது என தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதன்பிறகு முக ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பினார்.