திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக ஒரு வாகனம் வந்து கொண்டிருந்த நிலையில் அதனை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது.

அதன்படி மொத்தம் 1100 கிலோ மூட்டை மூட்டையாக இருந்தது. இதனை காவல்துறையினர் பறிமுதல் செய்த நிலையில் வாகனத்தில் வந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பக்ருதீன் (47), அப்துல் ரஹீம் (43) மற்றும் கிருஷ்ணன் (40) ஆகியோர்களை கைது செய்தனர். மேலும் இவர்கள் பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு குட்காவை கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.