தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யார் கையில் உள்ளது என்று கேட்டார். அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமாவளவன் கையில் இருக்கிறதா அல்லது ஆதவ் அர்ஜனா கையில் இருக்கிறதா.? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தலைமையா அல்லது இரண்டு தலைமைகளா என்றார். அதன் பிறகு அம்பேத்கரின் பேரனான ஆனந்த் டெல்டும்டே ஒரு நக்சல் என்று கூறினார். அவர் ஒரு நகர்ப்புற நக்சல் ஆனந்த் டெல்டும்டே, லாட்டரி கிங் மாட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுனா ஆகியோரை விகடன் மேடை ஏற்றியது எதற்காக என்று கேள்வி எழுப்பினார்.

திருமாவளவன் செல்லாத அந்த நிகழ்ச்சிக்கு அவர் கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டும் எப்படி சென்றார். மன்னராட்சி என்று சொல்கிறீர்களே அதற்கு உறுதுணையாக இருந்தது யார் என்றார். மணிப்பூர் பற்றி விமர்சிப்பவர்களை அங்கு அழைத்துச் செல்ல நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் முன்னதாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்ட போது, அவர் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று திமுக அரசை சாடி பேசிய நிலையில் ஏற்கனவே பாஜகவை தமிழகத்தில் ஒழித்தாச்சு எனவும் அடுத்ததாக திமுக தான் என்றும் கூறினார்.

அதோடு களத்திற்கு விஜய் வரவேண்டும் எனவும் வேங்கை வயலுக்கு விஜய் ஒருமுறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும் எனவும் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என்றும் கூறினார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆதவ் அர்ஜுனா  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி திருமாவளவன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் தான் அண்ணாமலை இன்னும் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என திருமாவளவனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.