நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருக்கும் சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் திருமண பந்தத்தில் நான் நூறு சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் அது எனக்கு சரியாக அமையவில்லை என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

சாகுந்தலம் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில், “ஊ சொல்றியா மாமா ஊ சொல்றியா” பாடலுக்கு என்னை நடனம் ஆட வேண்டாம் என நண்பர்களும், உறவினர்களும் கூறினார்கள். உண்மையாக இருந்த நான் எதற்காக எதோ தவறு செய்தவள் போல ஓடி ஒழியவேண்டும்’ என பேசியுள்ளார். இவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.