சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள அவப்பள்ளி மண்டலத்தில் பாஜக தலைவராக இருந்தவர் நீல்கந்த் கேகம். இவர் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்ற நிலையில் திடீரென திருமண நிகழ்ச்சிக்கு மாவோயிஸ்டுகள் வந்துள்ளனர். அவர்கள் பாஜக நிர்வாகியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நீல்கந்த் கேகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் போரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நீல்கந்த் கேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாவோயிஸ்டுகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.