உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் கொடூரத்தனமாக அமைந்துள்ளது. அதாவது கடந்த மாதம் உசைன்பூர் என்ற கிராமத்தில் சோயப் அகமது (25) என்ற வாலிபருக்கும் தரன்னும் (22) என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. கடந்த 6-ம் தேவி சோயப் தன் மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில் வரதட்சணை பணமாக 5000 ரூபாய் கேட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து அந்த பணத்தை வேண்டும் என்று கேட்ட நிலையில் அவர்களால் அந்த பணத்தை கொடுக்க முடியவில்லை. பின்னர் கோபத்துடன் சோயப் வந்துள்ளார். அவர் இது தொடர்பாக தன் மனைவியுடன் தகராறு செய்து கோபத்தில் அவரை கொலை செய்துவிட்டார். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சோயப்பை கைது செய்துள்ளனர்.