திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே ஆன்லைனில் தரிசன டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
பக்தர்கள் தோமாலை, அர்ச்சனை மற்றும் சுப்ரபாதம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டை வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி காலை 10 மணி வரை லக்கிடிப்பில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறும் டிக்கெட் ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்தி பெறலாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.