கோவையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 673 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி அஜிதாவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Sc Psychology பட்டப்பிடிப்பில் சேர்த்துக் கொண்டதுடன் கல்லூரி நிர்வாகமே முழு செலவையும் ஏற்பதாக உறுதி அளித்துள்ளது.

திருநங்கைகளுக்கான தனிக் கழிப்பறைகள் போன்ற சிறப்பு கட்டமைப்பை உருவாக்க முடியாது என பல தனியார் கல்லூரிகள் வாய்ப்பு மறுத்த நிலையில், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அந்த வாய்ப்பை வழங்கி உள்ளது.