
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து அதிமுக வேட்பாளரும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட இருக்கிறது. இந்நிலையில் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, திமுக தலைவர் திராவிட அரசியல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வருகிறார். ஒரு சாதாரண எளிய தலித் தொண்டனை 2026-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா? ஒரு சாதாரண தொண்டனை திமுக கட்சியின் தலைவராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை என்று விமர்சித்தார். மேலும் வருகிற நாடாளுமன்ற திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுக காணாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார்.