நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில்  தேசியக்கொடி ஏற்றினார்.

இதனை தொடர்ந்து தியாகிகள் பென்ஷன் 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. முன்னதாக அவர்களுக்கான பென்ஷன் 20 ஆயிரம் ரூபாயாக இருந்தது. விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயிலிருந்து 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்