எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயாரா என்று முதல்வர் ஸ்டாலினிடம் சவால் விட்டிருந்தார். தற்போது இந்த சவாலை ஏற்றுக் கொள்ள நான் தயார் என்றும்  இந்த திட்டங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கிறேன் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறும் போது எடப்பாடி பழனிச்சாமி என்னை அழைத்தால் கண்டிப்பாக நான் அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். கலைஞர் பெயர் வைக்கப்படுவது விமர்சிக்கப்படும் நிலையில் வேறு யார் பெயரை வைப்பது. யாருடைய பெயரைத் திட்டங்களுக்கு வைக்கவேண்டுமா அவருடைய பெயரை தான் வைத்து வருகிறோம் என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் தற்போது அதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக்கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது நிலையில் இது சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.