ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக தேர்தல் வாக்குறுதியாக சொன்னவைகளில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீதமுள்ள திட்டங்களும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் எந்தவித குளறுபடியும் ஏற்படாத நிலையில் இதுவரை 2 1/2 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மீதமுள்ள 12 லட்சம் மின் இணைப்புகளையும் ஆதாருடன் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.