தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. திமுகவிற்கு தற்போது பலம் கூடியுள்ள நிலையில் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் எத்தனை காலம் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோம், பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் தான் பதில் அளிக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை அரைக்கூவல் விடுத்துள்ளார். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது குற்றமல்ல என்ற அவர் இதற்கு முன்பு தனித்துப் போட்டியிட்டு 20 சதவீதம் வாக்குகளை பெற்றதாக தெரிவித்தார். அவரின் பேச்சு மூலம் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.