
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த துணை முதல்வர் தன்னுடைய மகனுக்காக ஒரு பெண் கலெக்டரை எழுந்து நிற்க வைத்துள்ளார். இந்த ஆட்சியில் அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
திமுக உலகத்தமிழ் மாநாட்டை நடத்திய போது அந்த மாநாட்டுக்கு வந்த அறிஞர்கள் அனைவரும் கீழேதான் அமர வைக்கப்பட்டார்கள். அவர்கள் அனுபவிக்கிறார்கள் அனுபவித்து கொள்ளட்டும். இன்னும் ஒரு வருடம் தான். அதன் பிறகு மக்கள் இவர்களை எங்கே வைப்பார்கள் என்பது தெரியவரும். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்று கூறினார்.