சேலம் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், பெரியார் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம்,வ உ சி மார்க்கெட் மற்றும் நேரு கலையரங்கம் ஆகியவை மறு சீரமைப்பு பணிகளும் புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் மற்றும் தொங்கும் பூங்கா வளாகத்தில் வாகன நிறுத்துமிடம், ஆனந்தா பாலம் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் மற்றும் பள்ளப்பட்டு ஏறி புனரமைப்பு பணி உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் சுற்றுப்பயணம் ஆக நேற்று மாலை சேலம் சென்றடைந்தார்.

அப்போது நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுகவை இனி எந்த விதத்திலும் வீழ்த்த முடியாது என்ற நிலையை உருவாக்கி வருகிறேன் என்று சூளுரைத்தார். நாட்டில் பாஜகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருவதாகவும் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பாஜக தமிழ் நாட்டிற்கு செய்ததை அமித்ஷா பட்டியலிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பிய ஸ்டாலின் நாடும் நமதே நாற்பதும் நமதே என்பதை உரக்கச் சொல்லவே வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.