தமிழ்நாடு பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பாஜகவில் இருந்து தான் விலகுவதாக காயத்ரி ரகுராம் அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிப்பை வெளியிட்டார். இவர் அந்த கட்சியில் இருந்து விலகிய உடன் திமுக அல்லது அதிமுகவில் இணைய உள்ளதாக பல பரபரப்பு தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில் நான் எப்போதும் பாஜக தொண்டர் தான் என்று அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். திமுக அல்லது விசிகவில் சேர போவதாக சொல்கிறார்கள். அப்படி எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. என்னுடைய ராஜினாமா கடிதத்தை பாஜகவில் கொடுத்திருக்கிறேன். ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும் எப்போதும் பாஜகவுக்கு தான் ஓட்டு போடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.