நத்தம் அருகே பழுதடைந்த அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக வழிந்த மழை நீரில் பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து கோட்டையூர் சென்ற அரசு பேருந்தில் கோட்டையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்தனர்.

பலத்த மழை காரணமாக பேருந்தின் மேற்கூரை வழியாக மழை நீர் அருவி போல் கொட்ட தொடங்கியது. இதனால் இருக்கையில் அமர முடியாமல் நின்று கொண்டே மழை நீரில் நனைந்தவாறு பயணிகள் பயணம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.