நிதி பிரச்சனை, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் நேற்று பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கட்டிட பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக நடிகர் சங்கம் சார்பாக தெரிவித்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் தனது சொந்த வருமானத்தில் இருந்து ரூ.50 லட்சத்துக்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் அவர் வழங்கியுள்ளார்.