சென்னையில் தனது தாய் மற்றும் தம்பியை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் திருநகர் ஒன்றாவது தெருவை சேர்ந்த பத்மா என்பவருக்கு நித்தேஷ்(20) மற்றும் சஞ்சய் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் கல்லூரி படித்து வந்த நித்தேஷ் 14 அரியர் வைத்துள்ளார்.

இதனை முடிக்க சொல்லி கண்டித்ததால் தாய் மற்றும் தம்பியை அவர் கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தன்னுடைய உறவினர்களுக்கு மெசேஜ் செய்துவிட்டு உடல்களை சாக்கு பையில் கட்டி போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனிடையே திருவொற்றியூர் கடற்கரையில் மறைந்திருந்த அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.