மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிட விரும்புகிறோம். தாமரை சின்னத்தில் போட்டி என வெளியாகும் செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.