தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்களுடன் நடிப்பதற்கு முன்னணி நடிகைகள் கூட போட்டி போடும் நிலையில் நடிகை சாய் பல்லவி அஜித் மற்றும் விஜய் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் அந்த படத்தில் ராஷ்மிகா ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்தில் முதலில் சாய் பல்லவியை தான் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் சாய் பல்லவி நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால்தான் ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். உங்களுக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லையே என ராஷ்மிகா பற்றி விமர்சனங்கள் வந்தபோது எனக்கு விஜய் பிடிக்கும் என்பதால் அவருடன் நடிக்க வேண்டும் என்பதற்காக தான் முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் நான் அந்த படத்தில் நடித்தேன் என கூறினார். ஆனால் சாய் பல்லவி தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் தளபதியுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதேப்போன்று அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திலும் முதலில் சாய் பல்லவியை தான் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் வலிமை படத்தில் தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் சாய் பல்லவி நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் டாப் ஹீரோக்களாக வலம் வரும் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்களை நடிகை சாய் பல்லவி நிராகரித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.