மதுரையில் இருந்து ஒரு கார் திருச்சியில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. தற்போது அங்கு மேம்பால பணிகள் நடைபெறுவதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரில் வந்த இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.