தமிழகத்தில்  உள்ள பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் உட்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.  மேலும் மூன்று மாதங்களுக்கு இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.