சொகுசு ஹோட்டலில் ராயல் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, 41 ஆயிரத்து 477 ரூபாய் பில்லைக் கட்டாமல் டிசைன் டிசைனாக பிளான் போட்டு எஸ்கேப் ஆன 4 வாலிபர்களின் பலே தில்லாலங்கடி ஆட்டம் ஆக்ராவையே அதிர வச்சிருக்கு!

ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘தி ஓபராய் அமர்விலாஸ்’ ஹோட்டலில் கடந்த மே 7-ஆம் தேதி இந்த  சம்பவம் நடந்துள்ளது. அசாத் கான் என்ற வாலிபர் ஆன்லைனில் டேபிள் புக் செய்ய, குவாலியர் (Gwalior) பதிவு எண் கொண்ட ஸ்விஃப்ட் டிசையர் காரில் 4 நண்பர்களும் நள்ளிரவில் ஹோட்டலுக்கு வந்து இறங்கியுள்ளனர்.

ஆட்டுக்கறி, கோழிக்கறி என சொகுசு ரெஸ்டாரண்டில் உள்ள விலை உயர்ந்த ராயல் உணவுகளை ஒரு பிடி பிடித்துவிட்டு பில் கட்டும் நேரம் வந்தபோதுதான் அந்த  ட்விஸ்ட்டை அரங்கேற்றியுள்ளனர்!

திட்டமிட்டபடி 3 நண்பர்கள் நைஸாக எழுந்து பார்க்கிங் ஏரியா வழியாக ஹோட்டலை விட்டு வெளியேற, டேபிளில் தனியாக அமர்ந்திருந்த அசாத் கான் ஊழியர்களுக்குச் சந்தேகம் வராதபடி சீன் காட்டியுள்ளார். பின்னர் அவரும் “ஒரு சிகரெட் அடிச்சிட்டு வர்றேன்” என்று கூலாகச் சொல்லிவிட்டு, நேரே பார்க்கிங் சென்று தன் காரை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துள்ளார்!

நீண்ட நேரமாகியும் யாரும் வராததால் பதறிய ஹோட்டல் நிர்வாகம் சிசிடிவி-யைச் செக் செய்தபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். புக் செய்த மொபைல் எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட, மானப் பிரச்சினை என்று கருதி சுமார் 24 நாட்களாகத் தங்களின் சொந்த முயற்சியில் தேடிப் பார்த்துள்ளனர்.

ஆனால், எந்தவொரு க்ளூவும் கிடைக்காததால் இப்போ தாஜ் பாதுகாப்பு போலீசில் ஹோட்டல் தரப்பில்  புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் அந்த கார் குவாலியரைச் சேர்ந்த மாலதி என்ற பெண்ணின் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது.

ஃபைவ் ஸ்டார் ஹோட்டலையே ஏமாற்றிய இந்த நால்வர் கூட்டணியை நோக்கி இப்போ போலீசாரின் விசாரணை வளையம் படுபயங்கரமாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது..!