
சென்னை மாவட்டத்தில் உள்ள பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம் உள்ள 18 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம் புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம் உள்ளிட்ட கலைகளை நிகழ்த்தி காட்டி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர். ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதனால் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளின் மல்லர் கம்பம் சாகசத்தை கண்டு களித்தார். அதன் பிறகு முதலமைச்சர் மலர் கம்பம் ஏறி சாகசம் நிகழ்த்திய மாற்று திறனாளிகளுக்கு சால்வை அணிந்து கௌரவித்தார். அப்போது ஒரு சிறுவனிடம் மீண்டும் இன்னொரு முறை செஞ்சு காட்டுறியா என கேட்டார். அன்பு கட்டளையை கேட்டு சிறுவனும் அதை செய்து காட்டினார். இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.