தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது…. அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் தற்காலிக நீக்கம் என வெளியான அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுருத்தலின்படி இந்த கல்வியாண்டு எந்த பாடப்பிரிவு நீட்கப்படாது என்றும் அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் பாடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழி பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவானதன் காரணமாக நீக்கப்படுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு கடும் எதிர்ப்பை தொடர்ந்து தற்போது வாபஸ் பெறப்பட்டது.

Leave a Reply