இந்திய சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை ஒவ்வொரு மாதமும் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியலை ஆர்மேக்ஸ் ஸ்டார் மீடியா இந்தியா நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் தற்போது ஜனவரி மாதத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் பட்டியலை ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பின்படி நடிகர் விஜய் தான் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு முந்தைய மாதங்களிலும் நடிகர் விஜய் தான் முதலிடத்தை பிடித்திருந்தார். அதன் பிறகு இரண்டாம் இடத்தில் நடிகர் அஜித்தும், மூன்றாம் இடத்தில் நடிகர் சூர்யாவும், நான்காம் இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், ஐந்தாம் இடத்தில் உலகநாயகன் கமல்ஹாசனும் இருக்கிறார்கள். இதனையடுத்து ஆறாம் இடத்தில் நடிகர் தனுஷும், ஏழாம் இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும், எட்டாம் இடத்தில் நடிகர் விக்ரமும், ஒன்பதாவது இடத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இருக்கிறார்கள். மேலும் பத்தாவது இடத்தில் நடிகர் கார்த்தி இருக்கிறார்.