தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நேற்று பழ. நெடுமாறன் நெடுமாறன் அறிவித்தார். இந்நிலையில் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி‌ சரத் பொன்சேகோ பிரபாகரன் உயிருடன் இல்லை எனவும் அவருடைய பெயரை வைத்து சில இலங்கை மற்றும் தமிழ் அரசியல் கட்சியை தலைவர்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார். பழ. நெடுமாறன் 14 வருடங்களாக அதே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான சார்லஸ் அன்ரனி, பாலச்சந்திரன் மற்றும் மகள் துவாரகா ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்து விட்டனர். தன்னுடைய குடும்பத்தையே போராட்டத்தில் அர்ப்பணித்தவராக பிரபாகரன் இருக்கிறார். மேலும் பழ. நெடுமாறன் இறுதிப் போர் முடிவடைந்த நாளிலிருந்து தற்போது வரை பிரபாகரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாக கூறி தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்று விமர்சித்துள்ளார்.