ஆன்லைன் செயலியால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த வசந்த்(22) என்பவர் ஆன்லைன் லோன் செயலியில் ரூ.1 லட்சம் கடன்பெற்று திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்துள்ளார். இவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற ஆன்லைன் ஆப்களில் கடன்கள் வாங்க வேண்டாம் என்று காவல்துறையின் சார்பாக அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் கேம் செயலிக்கு தடை வந்ததைப்போல் லோன் செயலிக்கும் தடை வருமா என கேள்வி எழுந்துள்ளது.