வணிகர் சங்கம் வியாபார இடங்களில் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராக டிசம்பர் 16-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அன்றைய தினம் கடைகள் இயங்காது. மத்திய அரசின் இந்த முடிவு வியாபாரிகளை கடுமையாக பாதிக்கும். இதனால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனே திரும்ப பெறகோரி போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.