தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஆகிய தினங்களில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.