கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசு தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது “பிரதமர் மோடியின் எண்ணத்தில் தோன்றியது தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு. மிக குறுகிய காலத்தில் இந்நிகழ்ச்சியானது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் ஒவ்வொருவரின் உழைப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழல் நிலவுகிறது. எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்கிறார்கள். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது சரியாக இருக்கும்” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.