போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது அரசு போக்குவரத்து பேருந்துகளின் இருப்பிடத்தை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை பஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை சென்னை பஸ் செயலியை செல்போனில் டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டால் தெரிந்து கொள்ளலாம். சென்னையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட இருக்கிறது.

அதன் பிறகு மற்ற பகுதிகளிலும் தேர்வுகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் வசதி விரிவுபடுத்தப்பட்டு சென்னை பஸ் செயலியும் விரிவு படுத்தப்படும். இந்த செயலியில் பயணிகள் தங்களுடைய இருப்பிட விபரத்தை உறவினர்களுக்கு தெரியப்படுத்தும் வசதியும் இருக்கிறது. இதனால் மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பும் மேம்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். இதனால் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட பயணிகள் பேருந்து எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்ற விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.