தமிழக அரசின் 202-23 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழ்நாடு அரசின் 2023-ம் ஆண்டின் திருவள்ளுவர் விருது மற்றும் 2022-ம் ஆண்டின் 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை ஜனவரி 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவின் போது முதல்வர் ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.‌ இந்நிலையில் 2023-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு பொன்னுசாமிக்கும், பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பாவேந்தர் பாரதிதாசன் விருது திராவிட இயக்க எழுத்தாளர் வாலாஜா வல்லவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அம்பேத்கர் விருது எஸ்.வி ராஜதுரைக்கும், தேவநேயப் பாவாணர் விருது முனைவர் இரா மதிவாணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ. இரா வேங்கடாசலபதிக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மு. மேத்தாவுக்கும், திருவிக விருது நாமக்கல் பொ. வேல்சாமிக்கும், அம்பேத்கர் விருது எஸ்.வி ராஜதுரைக்கும், தேவநேய பாவாணர் விருது இரா. மதிவாணனுக்கும் வழங்கப்பட இருக்கிறது. தந்தை பெரியார் விருது கவிஞர் கலி. பூங்குன்றனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோ வனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.