தமிழக  ரேஷன் கடைகளில் அண்ண யோஜனா திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ முதல் 35 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்னுரிமை அட்டதாரர்கள் பலர் மாதந்தோறும் அரிசியை முறையாக வாங்காத காரணத்தினால் இந்த அரிசி முறைகேடாக வெளி சந்தைக்கு விற்பனைக்கு செல்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு   ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு உணவு வளங்கள் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது இனி  முன்னுரிமை அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதை எடுத்து ஆதார் இணைக்கும் பணி தமிழக முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நடைமுறை மூலம் அரிசி பெறாதவர்களின் விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.