தமிழகத்தில் மணமொத்த மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் ஜூன் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் வழங்கும் பணி நடைபெற உள்ளது.

இதற்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களின் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலகங்களில் ஜூன் 19ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு எமிஸ் தலத்தில் ஜூன் 26 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் பெறப்பட்டதற்கான ஒப்புகை சீட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அரசியல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்களை இறுதி செய்து ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் ஆணைகள் ஜூன் 30-ம் தேதி மாவட்ட கல்வி அதிகாரிகளால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.