அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அரசு பள்ளிகளில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பிற மொழியில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.

அதன் பிறகு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3192 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளோம். மேலும் இந்த மாதத்திற்குள் 3000 ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்  பணி நியமன ஆணையை வழங்குவார் என்று கூறினார்.