சென்னை பனையூரில் அடுத்த மாதம் விஜய் மக்கள் இயக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக நிர்வாகிகளுக்கு மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, நிர்வாகிகள் வேறு கட்சி அல்லது இயக்கத்தில் இருக்கக்கூடாது என்றும் ஆனந்த் கூறியுள்ளார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.